இன்றைய தினம் டீ சீரிஸ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக எம்எஸ் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் பயோபிக்குகள் திரைப்படமாக வெளியான நிலையில் அடுத்ததாக யுவராஜ் சிங்கின் பயோபிக் திரைப்படமாக உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்திற்கான ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எம்எஸ் தோனியின் பயோபிக் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது.இந்நிலையில் யுவராஜ் சிங்கின் பயோபிக் கண்டிப்பாக ரசிகர்களை அட்ராக்ட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது முன்னதாக தன்னுடைய பயோ பிக் எடுக்கப்பட்டால் அதில் சித்தாந்த் சதுர்வேதி தன்னுடைய கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை யுவராஜ் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பயோபிக் குறித்து யுவராஜ் சிங் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more