Tuesday, November 19, 2024

என் மீது தமிழ் ரசிகர்களுக்கு தனி அன்பு… நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட பாடகி பி.சுசிலா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ள பின்னணி பாடகர் பி. சுசிலா ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: “என் மீது தமிழ் ரசிகர்களுக்கு தனி அன்பு. பாடல்கள் என்றால் அவர்களுக்கு உயிர். அதனால்தான் கடவுள் என்னை ‘சரி இருக்கட்டும்’ என்று அனுப்பி வைத்துள்ளார். எனக்காக பிரார்த்தனை செய்து என்னை மீட்டுக் கொண்டு வந்த எல்லாருக்கும் மிக்க நன்றி.

கடவுள் எனக்கு எதற்காக இவ்வளவு நல்ல குரல்வளத்தை கொடுத்தார் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். கடவுள் இன்றி எதுவும் இல்லை. அவரை நம்பினோர் கெடுவதில்லை” இவ்வாறு பி.சுசிலா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News