Tuesday, November 19, 2024

அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் சிவப்பு நிற புடவையில் தங்கமாக ஜொலித்த மாளவிகா மோகனன்… ஏன் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்தார். மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக ஆனார். அந்த வரிசையில், அவர் தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் “தங்கலான்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.”தங்கலான்” திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்க, ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று திரையரங்கில் வெளியிட உள்ளது. படத்தின் விளம்பர வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

“தங்கலான்” திரைப்படத்தில் ஆர்த்தி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். சவாலான கதாபாத்திரம் என்பதால், மாளவிகா மோகனன் இந்தப் படத்திற்காக மிகவும் மெனக்கட்டுள்ளார். சிலம்பம் பயிற்சி முதல் உடல் எடையை குறைப்பது வரை பல கஷ்டங்களையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

மேலும், இப்படத்தில் அவர், படத்தின் முழுக்க மேலாடை இல்லாமல் நடித்துள்ளார். திரையில் அவர் காட்சியளிக்கும் அனைத்து காட்சிகளும் சிகப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. அந்த சிகப்பு நிறத்தை பிரதிபலிக்கும் விதத்தில், தங்கலான் படம் சார்ந்த அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் சிவப்பு நிற புடவையில் தங்கமாக ஜொலித்துள்ளார். மொத்தத்தில் இதுவரை பார்க்காத மாளவிகாவை தங்கலான் படத்தில் காண முடியும்.படத்தின் கதாபாத்திரத்தில் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் தோற்றத்தை விளம்பர நிகழ்ச்சிகளுக்காக அணிவது பாலிவுட்டில் வழக்கமானது. அந்த முறையைப் பின்பற்றிய மாளவிகா, தங்கலான் படத்தின் புரமோஷனில் இந்த பாணியை பயன்படுத்தியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News