1980களில் தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் ரேவதி. பாரதிராஜா இயக்கிய “மண் வாசனை” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து “கை கொடுக்கும் கை”, “புதுமைப் பெண்”, “வைதேகி காத்திருந்தாள்” என ஹிட் படங்களில் நடித்தார்.
இந்நிலையில் இயக்குநர் பாண்டியராஜன், தான் இயக்க இருக்கும் ஆண்பாவம் படத்தில் நடிக்க வேண்டும் என ரேவதியை அணுகினார். ஆனால் பரபரப்பாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு இருந்த ரேவதி, கால்ஷீட் இல்லை என நிலைமையைச் சொன்னார்.
அதற்கு பாண்டியராஜன், ஐந்தே நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என சொல்லியிருக்கிறார்.
ஆச்சரியப்பட்ட ரேவதி, தனது தேதிகளை அட்ஜெஸ்ட் செயது ஐந்து நாட்கள் நடித்துக் கொடுத்தார்.
படத்தில் தான் கவுரவ வேடத்தில் வர இருப்பதாகவே நினைத்தார்.
படம் வெளியானவுடன் பார்த்தவருக்கு அதிர்ச்சி. படம் நெடுக தனது காட்சிகள் வருவதைக் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
‘உங்களுடைய திரைக்கதை யுக்திதான் இதற்கு காரணம்’ என பாண்டியராஜனை பாராட்டினார்.
இந்தத் தகவலை சமீபத்தில் பாண்டியராஜேனே ஒரு வீடியோ பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்பாவம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.