Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

வாடகை தாய் விவகாரத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘யூகி’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் ‘யூகி’. வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 11:11 Productions நிறுவனத்தின் தயாரிப்பாளரான பிரபு திலக் பேசும்போது, “இங்கு வந்து உங்களை சந்திப்பது மிக மகிழ்ச்சி. இப்போது திரைத்துறை மிக நன்றாக இருக்கிறது. பெரிய படங்கள் மட்டுமே ஓடும் என்ற நிலையில் லவ் டுடே’ போன்ற படங்கள் ஓடுவது பெரிய நம்பிக்கை தருகிறது.

‘பேபல்’ என்றொரு படம் வந்துள்ளது. அந்தப் படத்தில் வேறு வேறு நாடுகளில் நடக்கும் சம்பவங்கள் ஒருவரையொருவர் எப்படி பாதிக்கும் என சொல்லியிருப்பார்கள். அதே போல்தான் நம் வாழ்க்கையும் என நினைக்கிறேன். இந்தப் படமும் அது போலத்தான். மிக நல்ல திரைக்கதை. இப்படத்தை நான் வெளியிடுகிறேன். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக படம் பிடிக்கும் நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் ராஜாதாஸ் குரியாஸ் பேசும்போது, “எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது. எனக்கு தமிழ் பிடிக்கும். இப்போது திரைத் துறை மிகப் பெரிதாக மாறியிருக்கிறது. அந்த நம்பிக்கையில் இந்தப் படத்தை இரு மொழிகளில் எடுத்துள்ளோம். இதை எப்படி வெளியிடப் போகிறோம் என பயந்து கொண்டு இருந்தோம். அப்போதுதான் பிரபு சாரை சந்தித்தோம். அவர் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. கொரோனா காலகட்டத்தில் இப்படம் நடந்தது. இப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்து தந்த அனைவருக்கும் நன்றி. தமிழ் திரையில் இப்போது நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி…” என்றார்.

இசையமைப்பாளர் ரெஞ்சின் ராஜ் பேசும்போது, “திரையரங்கில் வெளியாகும் எனது முதல் படம் இது. எப்போதும் எனது ஃபேவரைட் தமிழ் பாடல்கள்தான். இந்த யூகி’ படத்தில் வித்தியாசமான இசையில் இரண்டு பாடல்களை தந்துள்ளோம். உங்கள் ஆதரவு எனக்கு தேவை. இயக்குநர் ஜாக் ஹாரீஷ்க்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கு நன்றி..” என்றார்.

ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ் பேசும்போது, “எழுத்தாளர் பாக்கியராஜால்தான் இந்தப் படத்திற்குள் வந்தேன். ஜாக் சாரிடம் வேலை பார்ப்பது மிக கடினமாக இருக்கும். கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடந்தது. நடிகர்களின் ஒத்துழைப்பால்தான் சிறப்பாக இப்படத்தை முடிக்க முடிந்தது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகை பவித்ரா லக்‌ஷ்மி பேசும்போது, “முதல்முறையாக ஒரு ஆடியோ லாஞ்ச்சில் நான் கலந்து கொள்கிறேன். இந்த யூகி’ படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அறிமுகமான சீக்கிரத்தில் இரு மொழி படத்தில் நடிப்பது மிகப் பெரிய கொடுப்பினை. இந்தப் படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. பாக்கியராஜ் சார் மிக அட்டகாசமாக எழுதியுள்ளார். ஜாக் சார் அற்புதமாக எடுத்துள்ளார். இரு  மொழியில் இப்படத்தை எடுத்தது புது அனுபவம். இப்படத்தை வெளியிடும் 11:11 Productions நிறுவனத்திற்கு நன்றி. எனக்கு ஆதரவு உங்களுக்கு நன்றி…” என்றார்.

கதாசிரியர் பாக்கியராஜ் பேசும்போது, “குஷன் பிரதர், ஜாக் பிரதர் மற்றும் 11:11 Productions  நிறுவனத்தின் பிரபு திலக் ஆகியோருக்கு நன்றி. ஜாக் எந்த ஒரு சின்ன விசயத்திலும் என்னை ஆலோசனை கேட்பார். அவரது அன்புக்கு நன்றி.

‘யசோதா’ படமும் வாடகை தாய் கதையில் உருவானது என்பது தெரிந்தவுடன் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் அந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் நிம்மதியே வந்தது. ஏனெனில், அது முழுக்க வேற கதை. இப்படம் மனித உறவுகளை பற்றிய கதை. இதில் எமோஷன்ஸ் நிறைய இருக்கும். தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸை இப்படம் ஏமாற்றாது. அனைவரும் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி…” என்றார்.

நட்டி எனும் நட்ராஜ் பேசும்போது, “பிரபு திலக் என்னுடைய ஃபேமிலியில் ஒருத்தர் மாதிரி. அவர் வெளியிடும் படங்களை பார்த்து பெருமையாக இருக்கும். அவர் இந்தப் படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. இந்தப் படம் கோவிட் காலத்தில் நடந்தது. எங்கள் அனைவரையும் நன்றாக பார்த்துக் கொண்ட தயாரிப்பாளருக்கு நன்றி. ஜாக் மிக அற்புதமாக இயக்கியிருக்கிறார். நீங்கள் நினைப்பது போல் இந்தப் படம் இருக்காது. உங்களை நிறைய ஆச்சரியப்படுத்தும்..” என்றார்.

நடிகை ஆத்மிகா பேசும்போது, “நீண்ட காலம் கழித்து தமிழில் வந்திருப்பது மகிழ்ச்சி. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் எடுத்தது மகிழ்ச்சி. மிக நல்ல திரைக்கதையான இந்தப் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் எனக்கு வித்தியாசமான பாத்திரம். முதலில் கடினமாக இருந்தது. பின்பு சவாலாக முயன்று செய்துள்ளேன். இப்படத்தில் ஆதரவு தந்த அனைவருக்கும் உடன் நடித்த நடிகர்களுக்கும் நன்றி…” என்றார்.

நடிகர் நரேன் பேசும்போது, “கைதி படத்திற்கு பிறகு நிறைய போலீஸ் பாத்திரம் இந்தக் கதையும் அந்த மாதிரிதான் என்பதால் இப்படத்தில் நடிக்க கூடாது என்றுதான் கதை கேட்டேன் ஆனால் கதையை இயக்குநர் சொன்னவிதம் அதில் இருந்த திருப்பங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

இந்தப் படத்தை அற்புதமாக எடுத்துள்ளார்கள். ஓடிடியில் நிறைய ஆஃபர் வந்த போதும், இப்படத்தை நம்பி திரையரங்கிற்காக தயாரிப்பாளர்கள் கொண்டு வந்துள்ளார்கள். இப்படம் நிறைய பேரை தமிழ் சினிமாவிற்கு தரும். கதிர் நட்டி இருவருடன் நடித்தது மகிழ்ச்சி. படம் வெளியிடுவதில் உள்ள கஷ்டம் எனக்கு தெரியும். படத்தை வெளியிடும் 11:11 Productions பிரபு திலக் அவர்களுக்கு நன்றி…” என்றார்.

நடிகை கயல் ஆனந்தி பேசும்போது, “கயல் படம் வந்து 8 வருடம் ஆகிறது. நீங்கள் காட்டி வரும் அன்புக்கு நன்றி. இந்த யூகி’ படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். இப்படம் பண்ணும்போது நான் உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தேன். மிக, மிக சுவாரஸ்யமான கதை. மிக அட்டகாசமாக எடுத்துள்ளார்கள். மிக திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

நடிகர் கதிர் பேசும்போது, “சுழல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் இந்தக் கதை வந்தது. போலீஸ் வேடம் திரும்பவும் பண்ணக் கூடாது என்ற முடிவில் இருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நட்டி, ஆனந்தி, நரேன் என எல்லோரையும் திருப்தி செய்யக் கூடிய கதை இது. மிக சுவாரஸ்யமான திரைக்கதையாக இருக்கும். பரியேறும் பெருமாளுக்கு பிறகு கயல் ஆனந்தியோடு நடிக்கிறேன். ஆனால் இந்தப் படம் மிக வித்தியாசமாக இருக்கும். பாக்கியராஜ் அட்டகாசமாக எழுதியுள்ளார். ஜாக் குழந்தை மாதிரி பேசி வேலை வாங்கி விடுவார். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

- Advertisement -

Read more

Local News