விபத்தில் சிக்கிய யூ டியூபர் டிடிஎஃப் வாசன்!  ஐசியூவில் தீவிர சிகிச்சை!

யு டியுபர் டிடிஎஃப் வாசன், அதிவேகமாக பைக் ஓட்டி, சாலையில் சாகசம் செய்து தனது சேனலில் பதிவிடுவார்.  இவருக்கு பல ரசிகர்கள் உண்டு. அதே நேரம், தானும் ஆபத்தில் சிக்கி, பிற வாகன ஓட்டிகளையும் ஆபத்தில் சிக்கவைக்கும் இவரை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிப்பது, காவல்துறை வழக்கு பதிந்தால் அதை பொருட்படுத்தாதது என இவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.

இந்த நிலையில், காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே, பைக்கில்  வீலிங் ( ஒற்றை சக்கரத்தில் ஓட்டுவது) செய்ய முயன்றபோது, பள்ளத்தில் விழுந்தார்.

பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து திரும்பினார்.

அவர் மீது  காவல்துறையினர் வழக்கு பதிந்து உள்ளனர்.

டிடிஎஃப் வாசன் தற்போது மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.