Wednesday, September 18, 2024

“‘டேய் நடிடா!”: தனுஷை அதட்டிய எழுத்தாளர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

செல்வராகன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்த புதுப்பேட்டை படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பத்தில் நடிக்க மறுத்தாராம்.

இதை அவரசே சொல்லி இருக்கிறார்.

கதையை  செல்வராகவன் சொன்னபோது தனுஷோ, “என்ன இந்த கேரக்டர என்னை பண்ண சொல்ற. ஒரு தாதா; குழந்தைக்கு அப்பா; அவன் இன்னொரு தாதாவை போட்டு தள்ளுறான். இதெல்லாம் எப்படி எனக்கு செட் ஆகும். வெயிட்டேஜ் ரொம்ப அதிகமா இருக்கு. நீ வேற யாரையாவது பெரிய ஸ்டாரை வைத்து பண்ணு என சொல்லியிருக்கிறார்.

அதற்கு செல்வாவும் நீ சொல்றதில் பாயிண்ட் இருக்கு என கூறியிருக்கிறார்.

இதனை கேள்விப்பட்ட எழுத்தாளர் பாலகுமாரன் தனுஷை அழைத்து, ‘டேய் என்னடா சொல்ற. நீ நடிக்கமாட்டேனு சொல்றியாமே. நீ நேர்ல போயி பார்த்துருக்கியா. தாதாலாம் எப்டி இருப்பானுங்க தெரியும். ஒல்லியா இவ்ளூண்டுதான் இருப்பான். நீ நடி அதுதான் ஒரிஜினலாக இருக்கும்’ என கூறி சம்மதிக்க வைத்திருக்கிறார். அன்று பாலகுமாரன் இல்லை என்றால் இன்று கொக்கி குமார் இல்லை என்பதுதான் நிஜம். இந்தத் தகவலை தனுஷ் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

- Advertisement -

Read more

Local News