“பெண்களிலும் மோசமானவர்கள் உண்டு!”: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி பேச்சு

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா  தனது  சுயசரிதையை, “UNSTOPPABLE”  என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “மீனாவின் வாழ்க்கையை கேட்டபோது, எனது தாயின் நினைவுதான் வந்தது. சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் “UNSTOPPABLE”ஆக இருப்பது தான் காரணம்.

அதையே மீனா அவர்கள் புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இந்த புத்தகம் பெரிய அளவில் ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன்.நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதியா என்று கூட கேட்டார்கள் அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவறானவர்கள் உள்ளனர் பெண்களிலும் தவரானவர்கள் உள்ளனர்” என்றார்.