Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

வெந்து தணிந்தது காடு 2 பாகம் உருவாகுமா? இயக்குனர் கௌதம் மேனன் சொல்வது என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், மற்றும் படம் 2022ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன், சிறப்பான வசூலையும் சாதித்தது. இதே படத்தை தெலுங்கில் தி லைப் ஆப் முத்து என்ற பெயரில் வெளியிட்டனர். மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரை அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், வெந்து தணிந்தது காடு 2 உருவாக்கப்படாததற்கான காரணத்தை இயக்குநர் கௌதம் மேனன் தெளிவுபடுத்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது, “வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை முழுமையாக தயார் செய்யப்பட்டது. ஆனால் படம் வெளியான 25 நாட்களுக்குப் பிறகு, சிம்பு இதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. அதனால், படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News