கற்றது தமிழ் உள்ளிட்ட கவனத்தை ஈர்க்கும் படங்களை தொடர்ந்து அளித்து வருபவர் இயக்குநர் ராம். இந்த வரிசையில் முக்கியமானது பேரன்பு. மம்மூட்டி, சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம், காண்பவரை கண்கலங்க வைத்தது.
இப்படத்தில் இருந்து ராம் – மம்முட்டி இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இது குறித்து ராம் கூறும்போது, “திரையில் அவரைப் பார்த்து பிரமித்து இருக்கிறேன். ஆனால் பழகும்போதுதான் தெரிந்தது அவர் ஒரு குழந்தை.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மூன்று தேசியத் திரைப்பட விருதுகள் பெற்றிருக்கிறார். தவிர ஏழு கேரள மாநிலத் திரைப்பட விருதுகள் மற்றும் பதின்மூன்று பிலிம்பேர் விருதுகள் தென்னக விருதுகள் என பெரிய பட்டியலே உண்டு. 1998 இல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
ஆனால் எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுவார். மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அவரது கையைப்பிடித்து இழுத்து, தள்ளி எல்லாம் விளையாடுவேன். நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது” என மம்முட்டியுடனான தனது நட்பு குறித்து பகிர்ந்துகொண்டார் ராம்.