சினிமாவில் தோனி? :சாக்‌ஷி விளக்கம்

தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, ரமேஷ் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – இவானா ஜோடியாக நடிக்கும் படம் ‘எல்ஜிஎம்’. ( ‘லெட்ஸ் கெட் மேரிட்’)

படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மலையாள இசையமைப்பாளர் விஸ்வஜித் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியனது.

இப்படத்தை விளம்பரப் படுத்தும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஜூலை 25) சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் சாக்‌ஷியிடம், “தோனி சினிமாவிலும் கால் பதிப்பாரா?” என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதலளித்த அவர், “நல்ல கதை என்றால் அவர் அதில் நடிக்கலாம். அவர் ஏற்கெனவே ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ளார். அவருக்கு கேமரா பயம் கிடையாது. எப்படி நடிக்க வேண்டும் என்றும் அவருக்கு தெரியும். ஏதேனும் நல்ல கதை அமைந்தால், அதில் அவர் நடிக்கக் கூடும். அவருக்கான கதையை தேர்வு செய்யவேண்டுமென்றால், நான் ஆக்‌ஷன் கதைகளைத் தான் தேர்ந்தெடுப்பேன். அவருக்கு ஆக்‌ஷன் படங்கள் மிகவும் பிடிக்கும்” என்றார்.