விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ ஆகிய இரு திரைப்படங்களும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளிவந்தன. இரண்டுமே மாபெரும் வெற்றியை பெற்றதோடு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றன. குறிப்பாக ‘லியோ’ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய எல்.சி.யூ.வில் (Loki Cinematic Universe) உள்ளது.

தற்போது, ‘மாஸ்டர் 2’ மற்றும் ‘லியோ 2’ குறித்து ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். அதில், மாஸ்டர் 2 பற்றிய யோசனையை விஜய் சார் அவர்களிடம் பகிர்ந்தேன். அந்த படம் மிகவும் ஹாப்பியான, மகிழ்ச்சிகரமான படமாக இருக்கும். ஏனெனில் ஜே.டி என்ற கதாபாத்திரம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல் ‘லியோ 2’ குறித்த யோசனையும் அவரிடம் தெரிவித்துள்ளேன்.
ஆனால் இப்போது விஜய் சார் பார்வை மக்களுக்கு சேவை செய்வதிலேயே உள்ளதால், அவருடன் சினிமா பற்றி அதிகமாக விவாதிக்க முடியவில்லை. சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக. ஆனால் மக்களுக்கு சேவை செய்வது ஒரு மேலான நோக்கம். எனவே அந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். இருப்பினும், அவரை மீண்டும் இயக்க வேண்டும் என்பதற்கான ஆவலும் எனக்குள்ளது. ஆனால் முடிவை எடுக்க வேண்டியவர் விஜய் சார் தான் எனக் கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.