Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“துணிவு’ பட விழாவுக்கு அஜீத் வருவாரா..?” – மேனேஜர் வெளியிட்ட தகவல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜீத் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். அஜீத்  இரட்டை வேடத்தில் நடித்துள்ளாராம்.

வங்கி கொள்ளை தொடர்பான கதையில் இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படம் வரும் பொங்கல் தினத்தின்று வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைக்கு நடிகை மஞ்சு வாரியர் தனக்கான போர்ஷனின் டப்பிங் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த ‘துணிவு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஜித்தை கலந்து கொள்ள வைக்க தீவிரமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக சில இணையத்தளங்களில் செய்திகள் பரவின. ஒருவேளை அஜித் இதில் கலந்து கொண்டால் வசதியாக இருக்க வேண்டி, நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்தத் தகவல்கள் அனைத்தும் பொய். துணிவு’ படத்தின் பிரமோஷன் பணிகளில் அஜித் கலந்து கொள்ள மாட்டார் என்று அவரின் மேனேஜரான சுரேஷ் சந்திரா மறைமுகமாக செய்தியை வெளியிட்டுள்ளார்.

அஜீத் சொன்னதாக அவரது மேனேஜரான சுரேஷ் சந்திரா வெளியிட்ட செய்தி இது :

“A good film is promotion by itself!! – unconditional love!  – Ajith

“ஒரு சிறந்த திரைப்படம் தன்னைத்தானே விளம்பரம் செய்து கொள்ளும்” என்று அஜீத் சொன்னதுபோல வெளியாகியிருக்கும் இந்தத் தகவலே. ‘துணிவு’ பட விழாவில் அஜீத் கலந்து கொள்வார் என்ற செய்தியில் உண்மையில்லை என்பதை மறைமுகமாகச் சொல்கிறது.

- Advertisement -

Read more

Local News