Friday, April 12, 2024

“என் சொந்தப் பிரச்சினைகளை ஏன் எழுதுறீங்க..? – மீடியாக்களிடம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“எல்லார் வீட்டிலும் இருப்பது போல தன் வீட்டிலும் பிரச்சினைகள் இருக்கிறது. அதையெல்லாம் ஏன் மீடியாக்கள் எழுதுகின்றன..?” என்று கேள்வியெழுப்பியுள்ளார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அவர் தயாரித்து, இயக்கியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது. “ஒவ்வொரு இயக்குநரும் சமூக நோக்கத்தோடு இருக்க வேண்டும். உண்மையை பயப்படமால் உரக்கச் சொல்ல வேண்டும்.

சமுத்திரக்கனி எப்போதும் ஆந்திராவில் தெலுங்கு படங்களில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு படத்தில் நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதற்காக சமுத்திரக்கனி தமிழ் படங்களை மறந்துவிடக் கூடாது.

நடிகை இனியாவிற்கு ஒரு படி மேலே ஷாக்சி அகர்வால். துப்பாக்கி’ நான் ஆரம்பித்த படம். தவிர்க்க முடியாத காரணத்தினால் நான் அதை தொடர முடியவில்லை. தாணு தயாரித்தார். விஜய்க்கு மிகப் பெரிய வியாபாரம் செய்து கொடுத்த படமும் அதுவே.

விஜய்யை முதலில் சமூகம் சார்ந்த படங்களில் நடிக்க வைக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதனால் இளைஞர்கள் மத்தியில் இடம் பிடிக்கும்விதத்தில் இளைஞர்களை கவரும் வகையிலான படங்களிலேயே விஜய்யை நடிக்க வைத்தேன்.

ஊடகங்களும் உண்மையை சொல்ல வேண்டும். நடக்குற தவறுகளை உரக்க சொல்ல வேண்டும். விஜய் என்ற பெயர் என் மகனுக்கு எப்படி வந்தது என்று நான் சொன்னதை இப்போது திரித்து சொல்லியிருக்கிறார்கள். விஜய்க்கு நாகி ரெட்டி பெயர் வைத்தார் என்று ஒரு வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய பொய். விஜய்க்கு வெற்றி என்ற பெயர் இருப்பதால் நான்தான் அந்தப் பெயரை வைத்தேன். இப்படியெல்லாம் பொய்யான தகவல்களை மீடியாக்கள் எழுதுவது ஏன்..?

எழுதுவதற்கு இங்கே நிறையவே இருக்கிறது. தேதிகளைக் கொடுத்துவிட்டு நடிக்க வராத நடிகர்களைப் பற்றி எழுதுங்கள்.. சம்பளம் கொடுக்காத தயாரிப்பாளர்களைப் பற்றி எழுதுங்கள். இதைப் பத்தி ஏன் எழுதணும்.. அடுத்தவர்களின் சொந்த விவகாரங்களைப் பற்றி ஏன் எழுத வேண்டும்..?

எனக்கும் என் மகன் விஜய்க்கும் இடையில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது. அது எங்களின் குடும்ப கதை. குடும்பம் என்றால் ஆயிரம்பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அப்பா மகன் இடையே பிரச்சினை இருக்கும். இன்று சண்டையிட்டுக் கொள்வார்கள். அடுத்து கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். அதேதான் எல்லார் வீட்டிலேயும்.. இதை ஏன் மற்றவர்கள் பேச வேண்டும்?…” என்று கேள்வியெழுப்பினார்.

- Advertisement -

Read more

Local News