புஷ்பா 2′ படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, நடிகர் அல்லு அர்ஜுன் தனது அடுத்த திரைப்படம் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இதற்கிடையில், ‘அலா வைகுந்தபுரமுலோ’ படத்தை இயக்கிய திரிவிக்ரம் சீனிவாஸின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதனிடையே, அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க ஒப்புக்கொண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.முதலில், அட்லி இந்தக் கதையை சல்மான் கானுக்காக எழுதியதாகக் கூறப்பட்டது. ஆனால், பட்ஜெட் மிக அதிகமாக இருந்ததால் தயாரிப்பாளர்கள் அந்த திட்டத்திலிருந்து விலகினர். பின்னர், அந்த அளவிலான பட்ஜெட்டுக்கு அல்லு அர்ஜுன் மிகவும் பொருத்தமானவர் என முடிவெடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

பாலிவுட் மீடியாக்கள் இந்தப் படம் பற்றிய புதிய அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், ஹிந்தி நடிகர் ஒருவரை வில்லன் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அல்லு அர்ஜுனின் தந்தை கதாபாத்திரத்தில் ஒரு மூத்த தமிழ் நடிகர் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்திற்கான இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.