Friday, April 12, 2024

“யார் ஸார் அந்த வாத்ஸ்யாயனர்..?”-கே.பாலசந்தரிடம் கேள்வி கேட்ட பிரபலம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உலகத்துக்கே காமத்தின் கலையைக் கற்றுக் கொடுத்த இந்தியாவின் புத்தகம் ‘காமசூத்திரம்’. அந்தப் புத்தகத்தை எழுதியவர் வாத்ஸ்யாயனர் என்பவர். “இவர் யார்..?” என்று ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரிடம் ஒருவர் கேட்டிருக்கிறார். அவர்தான் நாடக கதாசிரியரும், இயக்குநருமான மெளலி. ஆச்சரியம்தான்..!

இது பற்றி மெளலி பேசும்போது, “கே.பாலசந்தர் ஸார் ‘நிழல் நிஜமாகிறது’ படத்தை உருவாக்கும்போது என்னை அழைத்து அந்தப் படத்தைப் போட்டுக் காட்டினார். அதுவொரு மலையாளத் திரைப்படம். அதை அடிப்படையாக வைத்து தான் புதிய படத்தை உருவாக்கப் போவதாகச் சொன்னார்.

“படம் முழுவதும் டிரையாக உள்ளது. அதனால் கொஞ்சம் காமெடி சேர்க்கணும். நீதான் அதை எழுதி நடிக்கணும்…” என்று என்னிடம் சொன்னார் கே.பி. நானும் இந்த சீரியஸ் கதையில் எப்படி காமெடியை சேர்ப்பது என்பது புரியாமல் தவித்தேன். இருந்தும் கே.பி. ஸாருக்காக தனியான காமெடி டிராக்கை உருவாக்கிக் கொண்டு வந்து கொடுத்தேன்.

“அந்தக் குடியிருப்பில் இருக்கும் வீடுகளின் உரிமையாளர். இன்னும் கல்யாணமாகாத கட்டைப் பிரம்மச்சாரி. கொஞ்சம் சபல புத்தியுள்ளவர். ஆனால் யாரிடமும் அத்து மீற மாட்டார். பேசுவார். பார்ப்பார்.. அதிலும் ஏதாவது அழகான பெண்களின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டால் மெய் மறந்து நின்றுவிடுவார். அதற்குப் பின் அந்தப் பெண்களின் அழகை வர்ணிப்பார்..” இப்படி எனது கேரக்டரை நான் வடிமைத்திருந்தேன்.

இதை கே.பி. ஸாரிடம் சொன்னேன். சொன்னவுடன் “நல்லாயிருக்குய்யா..” என்றவர் “சரி. உன் பேரை வாத்யாயனார்ன்னு வைச்சுக்க…” என்றார். ‘வாய்லயே நுழைய முடியாத பெயரா இருக்கே,,?’ என்று சந்தேகத்துடன் “யார் ஸார் அந்த வாத்யாயனார்..?”ன்னு கே.பி.கிட்டேயே திருப்பிக் கேட்டேன். “யோவ்.. அவர்தான் ‘காமசூத்திரம்’ புத்தகம் எழுதினவர்”ன்னு சொல்லி சிரித்தார் கே.பி.

நான் சத்தியமாக அதுவரையிலும் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டதேயில்லை.. கே.பி. சொல்லித்தான் அதைத் தெரிந்து கொண்டேன்..” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் மெளலி.

- Advertisement -

Read more

Local News