யார் சூப்பர் ஸ்டார்?: பஞ்சாயத்தை முடிந்தது?

ரஜினி – விஜய் ரசிகர்களிடையே, யார் சூப்பர் ஸ்டார் என்ற மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஜெயிலர் படத்தில், நான்தான் சூப்பர் ஸ்டார், இந்த பட்டத்துக்கு யாரும் போட்டி போட்டால் மண்டையில் இடி விழும் என பாடினார். மேலும், சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுபவர்கள் காக்கா போல என்கிற பொருள்படும்படி பேசினார். இதெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் பிரபு, “தென்னிந்திய படங்களை வட மாநில மக்கள் விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்ப் படங்களுக்கு பெரிய மவுசு உண்டு. நான் டெல்லி, மும்பை செல்லும்போது, ‘தாதா ஜி வி லவ் தமிழ் பிக்சர்ஸ்’ என கூறுகின்றனர். தமிழ் படங்களுக்கு அங்கே மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். மற்றவர்கள் சூப்பர் ஆக்டர்ஸ். விஜய் வரட்டுமே. ரஜினியே என்ன சொன்னார், நான் அதே இடத்தில் இருக்க முடியாது. யாராவது வரவேண்டும் என்று தானே சொல்லி வழிவிடுகிறார். ரஜினி சூப்பர் ஸ்டார் தான். மற்றவர்கள் அந்த இடத்துக்கு வந்தால் சந்தோஷம்தான். தேவர் மகன் படம் பார்த்தீர்கள். அதில் தேவர் போனதுக்கு பிறகு அந்த இடத்தில் சின்ன தேவர் வந்து உட்காருகிறார். தம்பி அஜித்தும் இருக்கிறார். வரட்டும் யார் வேண்டுமானாலும் வரட்டும்” என்று கூறினார்.

இதையடுத்து நீண்ட நாட்களாக நீடித்து வந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக நம்பிக்கை தெரிவிக்கிறது திரைவட்டாரம். பார்ப்போம்!