Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

குஷ்புவுக்கு முன் சுந்தர் சி காதலித்தது யாரை?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரையுலகில் மேட் பார் ஈச் அதர் தம்பதி குஷ்பு – சுந்தர் சி! தங்களது அந்நியோன்யம் குறித்து இருவரும் பல முறை கூறியிருக்கிறார்கள். “பரஸ்பரம் அன்பு.. விட்டுக்கொடுத்தல்.. இதுதான் எங்கள் வெற்றிகரமான தாம்பத்ய ரகசியம்” என்று ஒரு முறை சொல்லி இருக்கிறார். அத்தனை அன்பான காதல் தம்பதி.

அதே  நேரம், குஷ்புவை சந்திக்கும் முன்பான தனது காதல் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் சுந்தர் சி.

அவர், “அழகான பொண்ணுங்களைப் பார்த்தா உடனே காதலிக்க ஆரம்பிச்சுருவேன்.. அப்படி என் பள்ளிக் காலத்துல நிறைய பெண்களை காதலிச்சிருக்கேன். ஆனா அதெல்லாம் வயசுக்கோளாறு.

ஆனா மனசு விட்டு முதன் முதலா காதலிச்சதும் உண்டு. மணிவண்ணன் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தேன். ஊட்டியில் படப்பிடிப்பு. அந்த படத்தில் ஹீரோயினா நடிக்க ஒரு இந்தி பொண்ணு வந்தது. இந்த பொண்ணு நமக்காகவே பிறந்து வந்திருக்கு அப்படினு ஒரு பீலிங்.  எப்படியாவது அந்த பொண்ணுகிட்ட பேசிடனும்னு துடிச்சேன்.

டைரக்டர் மணிவண்ணன் கண்டிப்பானவர். கேமராவுல ஸூம் வச்சு, உதவி இயக்குநர்கள் சரியா ஒர்க் பண்றாங்களானு அப்பப்போ கண்காணிச்சுக்கிட்டே இருப்பாரு. அதனால அந்த முதல் காதல் நிறைவேறாமலேயே போச்சு” என கூறியிருக்கிறார் சுந்தர் சி.

பரவாயில்லை.. தனது முதல் காதல் குறித்து வெளிப்படையாக பேசுகிறாரே சுந்தர் சி.!

- Advertisement -

Read more

Local News