Friday, February 7, 2025

மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? வெளிவந்த தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்ஜே, கிரிக்கெட் வர்ணனையாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமையுடன் கோலிவுட்டில் பெயர் பெற்றுள்ள ஆர்ஜே பாலாஜி, தற்போது சூர்யா நடிக்கும் சூர்யா 45 படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு, 2020ம் ஆண்டு அவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம், நயன்தாரா மற்றும் ஊர்வசி நடித்த முக்கிய கதாபாத்திரங்களுடன் வெளியானது. இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், நல்ல வசூலையும் அடைந்தது.

இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக, தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொடர்ச்சிப் படத்தை பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனவும், இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News