விடாமுயற்சி படத்திற்குப் பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “குட் பேட் அக்லி” படத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். இதில் அவருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில் வெளியான டீசர், 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை கடந்து, மிகப்பெரிய சாதனை படைத்தது.
இந்த நிலையில், “குட் பேட் அக்லி” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டிரைலர் எப்போது வெளிவரும்? என்ற கேள்விகள் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எழுந்துள்ளது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார் அதில்,படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில். சுட சுட ரெடி பண்ணியிருக்கோம்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.