உயர்ந்த உள்ளம் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை ஏவிஎம் ஸ்டுடியோ குடும்பத்தைச் சேர்ந்த அருணா குஹன் பதிவிட்டு உள்ளார்.
“கமல் நாயகனாக நடித்து, 1985-ம் ஆண்டு வெளியான படம் உயர்ந்த உள்ளம்.
இதற்கு முந்தைய படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு கமலுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டு இருந்தது. ஆனால் தன்னால் தாமதமாகக்கூடாது என படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். அன்று சண்டை காட்சி.
எப்படி இவர் சண்டைக் காட்சியில் நடிப்பார் என அனைவரும் வருத்த்தில் இருந்தனர்.
ஆனால் ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்னத்திடம் இந்த காட்சியின் ஒரு மாற்றத்துடன் படப்பிடிப்பை நடத்துமாறு கேட்டுக் கொண்டார்: அதன்படி கமல் அந்த சண்டை காட்சி முழுவதும் தனது வலது கைக்கு பதிலாக, தனது இடது கையைப் பயன்படுத்தி சண்டையிட்டார். அந்த அளவுக்கு சினிமாவை நேசிப்பவர் கமல்” என்று கூறியிருக்கிறார்.