Wednesday, April 10, 2024

படப்பிடிப்பு எப்போது? ’வாடிவாசல்’ புதிய அப்டேட்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கமிட்டான திரைப்படம் வாடிவாசல். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. விடுதலை 2 படத்தின் ரிலீஸுக்குப் பின்னரே வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல். இப்படத்தில் இயக்குநர் அமீர் நடிக்கவுள்ளதாக தரமான அப்டேட் கொடுத்துள்ளார் வெற்றிமாறன். சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா, பான் இந்தியா படமாக 10 மொழிகளில் உள்ளது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாக வைத்து உருவாகவிருக்கிறது வாடிவாசல்.

கங்குவா படப்பிடிப்பு இன்னும் முடியாமல் இருப்பதால் சூர்யா வாடிவாசல் படம் தொடங்காமல் இருக்கின்றனர். அதே வெற்றிமாறனும் விடுதலை 2ம் பாகத்தில் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஒரு கட்டத்தில் வாடிவாசல் டிராப் ஆக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என சொல்லும் விதமாக தற்போது தரமான  வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட் கொடுத்துள்ளார் வெற்றிமாறன். இந்த  படத்தில் இயக்குனர் அமீர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில்  நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News