Thursday, April 11, 2024

“மகன் விஜயைவிட நான் நேசிப்பது…”: அப்பா எஸ்.ஏ.சி. ஒப்பன் டாக்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், தனது வாழ்க்கைக் கதையை, யு டியுப் சேனலில் பேசி வருகிறார்.

சமீபத்திய வீடியோவில்,  “பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும். ஆனால் இதில் விஜய் எதிர்ப்பதம். அவருக்கு என்னைத்தான் மிகவும் பிடிக்கும். இன்றைக்கு அவர், தளபதியாக மாறியிருக்கலாம். ஆனால் அவர் எனக்கு இன்னும் குழந்தைதான். சிறுவயதில் அவர்  ஹோம்வொர்க் செய்யவில்லை என்றால் ஸ்கேல் வைத்து தொடையில் அடிப்பேன். அப்படியே சிவந்துவிடும். உடனே தேங்காய் எண்ணெய் எடுத்து வந்து நானே தேய்த்துவிடுவேன்.

அதே மாதிரி, இன்னமும் விஜயை குழந்தையாகத்தான் பார்க்கிறேன்.  

ஆனால் நான் முதலில் நேசிப்பது சினிமாவைதான். அதன்பிறகுதான் விஜய் அடுத்துதான் என் மனைவி ஷோபா” என்று பேசியிருக்கிறார் எஸ்.ஏ.சி.

இந்த வீடியோவை தற்போது பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News