Touring Talkies
100% Cinema

Tuesday, October 7, 2025

Touring Talkies

“நான் என்ன உடையணிந்தால் உங்களுக்கென்ன?” – நடிகை குஷ்பூவின் பதில் கேள்வி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“காவி என்பது வெறும் நிறம் மட்டும்தான். வேறேந்த அடையாளமும் இல்லை..” என்று நடிகை குஷ்பூ பதிலளித்துள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு பட விழாவில் நடிகை குஷ்பூவும் கலந்து கொண்டார். அப்போது குஷ்பூ காவி நிறத்தில் சேலையணிந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சின் முடிவில் குஷ்பு பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தபோது “நீங்கள் ஏன் காவி உடை போட்டிருக்கிறீர்கள்..?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த குஷ்பு, “இதைப் பார்த்தால் உங்களுக்கு காவி மாதிரி தெரிகிறதா..? உங்கள் அருகில் இருப்பவரும்தான் காவி உடை போட்டிருக்கிறார். அவரிடம் ஏன் நீங்கள் கேட்கவில்லை. பச்சை நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ உடை அணிந்து வந்தால் ஏன் அப்போது இப்படி கேட்கவில்லை..? காவி என்பது ஒரு நிறம் அவ்வளவுதான். நான் எந்த ஆடை அணிந்து வந்தால் உங்களுக்கென்ன.?” என்று பதில் கேள்வியை எழுப்பினார்.

- Advertisement -

Read more

Local News