பாலிவுட்டில் ‘கோல்மால்’ என்ற தலைப்பில் இதுவரையிலும் சீரீஸ் படங்களாக 4 படங்கள் வெளிவந்துள்ளன.
இந்தப் படத்தின் ஒரு கதையை தற்போது தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள். அந்தத் தமிழ்ப் படத்திற்கும் ‘கோல்மால்’ என்றே பெயர் வைத்துள்ளனர்.
Jaguar Studios சார்பில் தயாரிப்பாளர் B.வினோத் ஜெயின் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார்.
அறிமுக இயக்குநர் பொன் குமரனின் இயக்கத்தில், நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா, தான்யா ஹோப், பாயல் ராஜ்புத் ஆகியோரின் நடிப்பில் காமெடி கலாட்டாவாக இந்தப் படம் உருவாகவுள்ளது.
மேலும் ‘ஆடுகளம்’ நரேன், பாடகர் மனோ சோனியா அகர்வால், சஞ்சனா சிங், சாது கோகுல் மற்றும் பல முக்கிய பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
தயாரிப்பு – B. வினோத் ஜெயின், எழுத்து, இயக்கம் – பொன்குமரன், ஒளிப்பதிவு – சரவணன் S, இசை – அருள்தேவ், படத் தொகுப்பு – டான் பாஸ்கோ, கலை இயக்கம் – சிவகிருஷ்ணா, டிசைனர் – சுமா, லைன் புரொடியூசர் – லால் தாஸ், புரொடக்சன் எக்சிக்யூட்டிவ்- செந்தில் M, எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் – ரவிகுமார், கிரியேட்டிவ் புரொடியூசர் – நரேஷ் ஜெயின், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை, சென்னை, தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் R.B.சௌத்திரி, தயாரிப்பாளர் தனஞ்செயன், உட்பட தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் R.B.சௌத்ரி பேசும்போது, “இந்த ‘கோல்மால்’ பட இயக்குநரிடம் “என்ன கோல்மாலாவது செய்து, தயாரிப்பாளருக்கு மால் சம்பாதித்து கொடு” என்று சொன்னேன். ஜீவா, சிவாவுக்கு இப்படம் பெரிய வெற்றிப் படமாக இருக்கும். இந்தப் படம் இந்தியில் பெரிய வெற்றியைப் பெற்றபடம். அதேபோல் தமிழிலும் வெற்றி பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் இப்படம் வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்…” என்றார்.