கல்யாண சீன்! காட்டமான கார்த்திக்!

படப்பிடின்போது நடிகர் கார்த்திக் ஜாலியாக இருப்பார். அவரால்தான் மற்றவர்கள் டென்சன் ஆவார்கள். ஆனால் அவரே டென்சன் ஆன சம்பவமும் நடந்தது.

90களில் சுந்தர் சி, கார்த்திக் கூட்டணியில் வெளிவந்த படங்கள் வெற்றிவாகை சூடின.   ஆகவே, சுந்தர் சி இயக்கிய உனக்காக எல்லாம் உனக்காக என்ற படத்தின் கதையை கேட்காமலேயே ஓகே சொல்லிவிட்டார் கார்த்திக்.

முதல் நாள் ஷூட்டிங்..

கல்யாண சீன் என சொன்னவுடன், மாப்பிள்ளை போல் தயாராகி வந்தார் கார்த்திக்.

சுந்தர்.சி, “உங்களுக்கு கல்யாணம் கிடையாது. நீங்கள் ஒரு கல்யாணத்துக்கு வருவது போன்ற சீன்” என்றார்.

டென்ஷன் ஆன கார்த்தி, முதலில் கதையை சொல்லுங்கள், அப்புறம் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என்று சொல்ல…

அதன் பிறகு படப்பிடிப்பு தளத்திலேயே கதையை முழுவதுமாக சொல்லி இருக்கின்றனர்.

இப்படி படப்பிடிப்புக்கு போன பிறகு கதை கேட்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.