ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும் போது காலில் அடிபட்ட ராஷ்மிகா மந்தனா, சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருக்கிறார். இருந்தாலும், தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, சக்கர நாற்காலியில் சென்று வருகிறார். இதற்காகவே தற்போது அவர் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி உள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155716-819x1024.jpg)
இந்த நிலையில், தனது வீட்டில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ள ராஷ்மிகா, அப்போது அவர் அணிந்திருந்த டி-ஷர்டில் “கனிவுடன்” என்ற வார்த்தை அச்சிடப்பட்டிருந்தது. இதன் தொடர்பாக, “இன்றைய காலகட்டத்தில் கருணைக்கு மதிப்பு குறைவாகிறது. ஆனால், நான் கருணை மற்றும் அதனுடன் வரும் அனைத்தையும் சேர்த்து தேர்வு செய்கிறேன். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155717-819x1024.jpg)
அதே சமயம், விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஒரே காரில் ஏறும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. அந்த வீடியோவில், விஜய் தேவரகொண்டா விரைவாக காரில் ஏற, நொண்டியபடி வந்த ராஷ்மிகாவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இதன் காரணமாக, பலரும் இணையத்தில் விஜய் தேவரகொண்டாவை விமர்சித்தனர். அவருக்கு ஆதரவாக, ராஷ்மிகா இந்த பதிவை வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.மேலும், மராட்டிய மன்னர் சாம்பாஜியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சாவா என்ற ஹிந்தி படத்தில், ராஷ்மிகா மகாராணி ஏசுபாய் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம், காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படுகிறது. இத்துடன், சிக்கந்தர், குபேரா, தி கேர்ள் பிரண்ட் போன்ற படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.