Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

“நிஜ பன்னிக்குட்டியை வைத்தே படமாக்கினோம்” – இயக்குநர் அனுசரணின் அனுபவம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன் இருவரும் முதன்மை பாத்திரத்தில்  நடித்திருக்கும் திரைப்படம் பன்னிக்குட்டி’.

இப்படத்தில் மேலும், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பல முன்னணி பிரபலங்கள்  இணைந்து நடித்துள்ளனர்.

K இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார், மேலும் இயக்குநர் அனு சரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார். சண்டைப் பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றியுள்ளனர்.

ஒரு அழகான காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜீன் 8-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையொட்டி படக் குழுவினர் நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கை, ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இயக்குநர் அனு சரண் பேசும்போது, “எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த லைகா நிறுவனத்திற்கும், இயக்குநர் ஷமீருக்கும் நன்றி. வாழ்கையில் துவண்டு போன நிலையில் இருக்கும்போது, அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே காமெடி படம் கொடுக்க நினைத்தேன்.

ரவி முருகையாவின் கதைதான் இந்த பன்னிக் குட்டி’. இந்தக் கதையை தயாரிப்பாளரிடம் கூறும்போது, அவருக்கு மிகவும் பிடித்து போனது. படத்தில் லியோனி சார் நடிக்க வந்தது மகிழ்ச்சியான ஒன்று. எல்லா நடிகர்களும் நெருக்கடியான சூழலில் நடித்து கொண்டிருப்பவர்கள். ஆனால் முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து பணியாற்றினார்கள்.

இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இந்த கதைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நிஜ பன்னிக் குட்டியை வைத்துதான் படப்பிடிப்பை நடத்தினோம். அது மிகவும் கடினமாக இருந்தது.  விலங்குகளை வைத்து எடுப்பது சாதாரண காரியம் இல்லை. பல நெருக்கடிகளை கடந்து, சில யுக்திகளை பயன்படுத்திதான் படத்தை உருவாக்கினோம்.

உசிலம்பட்டியை சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கு நன்றி கூற வேண்டும். அவர்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ஒரு சிரிப்புடன் வெளியே வருவீர்கள். நம்பிக்கைதான் வாழ்கை என்பதை இந்த படம் கற்றுக் கொடுக்கும்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News