KPY பாலா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘காந்தி கண்ணாடி’. வரும் செப்டம்பர் 5ல் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் பாலாஜி சக்திவேல், நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய KPY பாலா, பல ஹீரோயின்கள் ஆபிஸ் வந்து கதை கேட்டு சூப்பர் என்றார்கள். ஆனால் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்றதும் பலர் நடிக்க மறுத்தார்கள். கடைசியில் 51வது நபராக வந்த நமீதா கிருஷ்ணமூர்த்தி தான் என்னுடன் நடிக்க ஓகே சொன்னார்.
செப்டம்பர் 5ம் தேதி என் காந்தி கண்ணாடி படமும் சிவகார்த்திகேயன் சாரின் மதராஸி படமும் வெளியாகிறது. அவருக்கு நாங்கள் போட்டி கிடையாது. அவரது படம் நிச்சயம் வெற்றிபெறும், எங்கள் படம் வெற்றி பெற ஆதரவு கொடுங்கள். அவர் படத்துக்கு வரும் கூட்டம் டிக்கெட் கிடைக்காவிட்டால் எங்கள் படத்துக்கு வருவார்கள். நான் உதவிகள் செய்வது விளம்பரமல்ல, மக்கள் ஆதரவால் நான் நன்றாக இருக்கிறேன். என்னால் முடிந்ததை அவர்களுக்கே திருப்பி செய்கிறேன் என்றுள்ளார்.