Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

‘வால்டேர் வீரய்யா’ படத்தின் முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம் பெற்ற முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வால்டேர் வீரய்யா’. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. கமர்சியல் எண்டர்டெய்னராகத் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவலை ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவருடைய இணைய பக்கத்தில், ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து கலக்கியிருக்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ இந்த வாரம் வெளியிடப்படும்” என பதிவிட்டிருக்கிறார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அதிவேக நடனத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும். இந்நிலையில் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌத்லாவும் இணைந்து நடனமாடி இருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம் பெற்றிருக்கும் சிங்கிள் ட்ராக் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News