பாக்கியராஜ் வீட்டு வாசலில் 3 ஆண்டுகள் காத்திருந்தேன் -செம்புலி ஜெகன்

’ஆராரோ ஆரிராரோ’ படத்தின் மூலம் உதவி இயக்குனராக தொடங்கி பின்னர் பல திரைப்படங்களில் கே.பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் செம்புலி ஜெகன்.

ராசுகுட்டி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் செய்தார் கே.பாக்யராஜ்.விஜயகாந்த்,அஜித், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.  எனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை. உதவி இயக்குனராக சேர்ந்தால் அது பாக்கியராஜ் அவர்களிடம் தான் என்று உறுதியுடன் இருந்தேன். தினமும் அவர் வீட்டு வாசலில் போய் நிற்பேன். அப்படியே மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. தனக்கும் பாக்கியராஜ் அவர்களின் சந்திப்பு மற்றும் அவரிடம் உதவி இயக்குனராக இருந்த அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார் செம்புலி ஜான்.