ரூ.50 கோடி வசூலைக் கடந்த ‘மார்க் ஆண்டனி’!

மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரிக்க, ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வெளியாகி உள்ள படம், ‘மார்க் ஆண்டனி. ’ ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இதன் எதிரொலியாக படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடியைத் தாண்டி வசூலித்து வருகிறது. இதில,தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ.35 கோடியை வசூலித்துள்ளது.

ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் நிலையில், இப்படம் பெரிய அளவில் லாபத்தை எட்டியுள்ளது. மேலும், இந்த வாரம் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவராததால் வசூல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.