Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

‘விருமன்’ படம் 4 நாட்களில் 35 கோடி வசூல் – விநியோகஸ்தர் சக்திவேலன் தகவல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர்நடிப்பில், இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி தொடர்ந்து வசூல் வாகை சூடி வருகிறது விருமன்’ திரைப்படம்.

இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் வகையில், ‘விருமன்’ படத்தின் வெற்றி விழா, சென்னை வி.ஜி.பி. கோல்டன் பீச் ரிசார்ட்ஸில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் விநியோகஸ்தர் சக்திவேலன் பேசும்போது, “எல்லாப் படங்களும் வெற்றியை நோக்கித்தான் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒரு சில படங்கள்தான் வெற்றியின் உச்சத்திற்கு போய் நிற்கும். அப்படி ஒரு படம்தான் இந்த ‘விருமன்’.

பி அண்டு சி-யில்தான் பெரிய கூட்டமாக வருவார்கள் என்று நினைத்தோம். முதல் முறையாக லூக்ஸ்-இல் 24 காட்சிகள் போட்டிருந்தார்கள். மல்டிபிளக்ஸ்-இல் 24 காட்சிகளை போடுகிறார்கள் என்று அதிர்ச்சியாக இருந்தது.

வியாழக்கிழமை முதல் திங்கள்கிழமைவரை 90 சதவீத டிக்கெட்டுகள் முன் பதிவாகி இருந்தது. பி அண்டு சி மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ்நாடே இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்று அப்போதே ராஜா அண்ணனிடம் கூறினேன்.

நிறைய படங்களின் வெற்றியே நிறைய பேர்களுடைய உழைப்பால்தான் இருக்கும். உழைப்பாகட்டும்.. இந்த படத்தின் திட்டமாகட்டும்… அதைத் தாண்டிய அன்பு 2D சூர்யா அண்ணன், ராஜசேகர் அண்ணன், கார்த்தி சார், சிவகுமார் ஐயா குடும்பத்தினர் உடைய மனசுக்கு ஒரு வெற்றி இருக்குமல்லவா..? அந்த வெற்றியாகத்தான் இந்த விருமனின் வெற்றியைப் பார்க்கிறேன்.

3 மடங்கு அன்பை வெளிக்காட்டி இருக்கிறார்கள். அதே ஊரை சேர்ந்த ஐந்து குடும்பங்கள் படம் பார்த்துவிட்டு, பெரியண்ணா இந்த கதாபாத்திரம், சின்ன அண்ணன் இந்த கதாபாத்திரம், அப்பா இந்த கதாபாத்திரம் என்று கூறி ஒட்டு மொத்தமாக பேசியதை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார்.

இந்த 4 நாட்களில் 35 கோடியை தாண்டி வசூல் ஆகி இருக்கிறது. இது சாதாரண வெற்றியல்ல; மிகப் பெரிய வெற்றி! எல்லோரும் உழைத்திருக்கிறார்கள். இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு இதைவிட சரியான தருணமோ, சரியான நபர்களோ இல்லை என்று நினைக்கிறேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News