சமந்தாவின் புது காதல்?: விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கான போட்டோ!

நாகசைதன்யாவை விவாகரத்து செய்த சமந்தா தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயில் சிக்கி சிகிச்சை பெற்றார். தற்போது குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக பழகுவதாக கிசுகிசுக்கள் வருகின்றன.

தற்போது இருவரும் குஷி படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ளனர். அங்கு ஓட்டல் ஒன்றில் விஜய்தேவரகொண்டாவுடன் உணவு சாப்பிடும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டு உள்ளார்.

மேலும்,, “நீ கடைசியில் இருந்தபோதும் பார்த்தேன். முதல் இடத்திற்கு வந்தபோதும் பார்த்தேன். நீ உன்னத நிலையை அடைந்தபோது கூட பார்த்தேன். வாழ்க்கையில் நீ கடந்து வந்த மேடு பள்ளங்களை எல்லாம் பார்த்தேன். எப்படிப்பட்ட நேரத்திலும் கூட சினேகிதர்கள் நம்முடனேயே இருப்பார்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

விஜய்தேவரகொண்டா, “எப்போதும் எனக்கு பிடித்த பெண் சமந்தா” என்ற பகிர்ந்துள்ளார்.

ஆக இருவரும் காதலித்து வருவது உறுதியாகி உள்ளது என்கின்றனர் தெலுங்கு பட உலகினர்.