Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

2023 பொங்கல் தினத்தில் விஜய், அஜீத்துடன் மோதும் விமல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடித்த ‘தமிழன்’ மற்றும் ‘துணிச்சல்’, ‘டார்ச் லைட்’ ஆகிய  படங்களை இயக்கியவர் அப்துல் மஜீத். இவர் தற்போது விமல், யோகி பாபு நடிக்க புதிய படமொன்றை அதிக பொருட்செலவில் தயாரித்து இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தைத் தனது கான்ஃபிடன்ட் பிலிம் கேப் (Confident Film Cafe) நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார் இயக்குநர் அப்துல் மஜீத்.

இந்தப் படத்தில் விமல் ஜோடியாக சாம்மிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா,  எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், சாம்ஸ், நமோ நாராயணன் என பெரிய  நட்சத்திர பட்டாளமே  இதில் நடிக்கிறார்கள்.

இன்று உலகமே புரோக்கர் மயமாகிவிட்டது. அதில் சில புரோக்கர்கள்  தம் சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாக மக்களை எப்படியெல்லாம்  ஏமாற்றுகிறார்கள்.  அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அந்தப் பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமெண்ட்,  ஆக்‌ஷன், ரொமான்ஸ்  கலந்து இப்படம் சொல்கிறது.

இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும்  நடந்து முடிந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சி வேலூர், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அரண்மனையில் நடக்க உள்ளது.

2023-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட் டுள்ளனர். முன்னதாக படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், ஆடியோ வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் டைட்டிலும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

- Advertisement -

Read more

Local News