Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“சிவகார்த்திகேயன் இடத்திற்கு விமல் வந்திருக்க வேண்டும்” – இயக்குநர் லிங்குசாமியின் ஆதங்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒடியன் டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் K.அண்ணாதுரை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’.

இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கட்டிடத்தில் பிரபல இயக்குநர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எழில், லிங்குசாமி, பேரரசு, ரமேஷ்கண்ணா, புவனா, சந்தோஷ் மற்றும் திருச்சி மாவட்ட வினியோகஸ்தர் ஜின்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை இந்தப் படத்திற்கு வைத்துள்ளார்கள். அவரது படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தும்போது சென்டிமென்டாக அந்தப் படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. நான் மகான் அல்ல’ திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம். அது போன்ற ஒரு வெற்றியை இந்தப் படம் நிச்சயம் பெறும்.

நடிகர் விமல் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மஞ்சப்பை’ போன்ற வெற்றி  படங்களில் நடித்துள்ளவர். சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு இடத்திற்கு அவர் இந்நேரம் வந்திருக்க வேண்டியது. இடையில் ஏதோ சில தவறுகளால் அதில் கொஞ்சம் தடை ஏற்பட்டுவிட்டது.

இப்போது சின்னப் படங்கள் என்று சொல்லப்படக் கூடிய லவ் டுடே’ போன்றவை ரிலீசுக்குப் பின் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று பெரிய படமாக மாறுகின்றன. இந்த படத்தின் டீசரை பார்த்தபோது எதுவுமே தப்பாக தெரியவில்லை. இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

- Advertisement -

Read more

Local News