என்ற தன்னுடைய முதல் படத்திலேயே விக்ரம் பிரபு மாபெரும் வெற்றியை கொடுத்தாலும் அதன் பிறகு அவர் நடிப்பு திறமைக்கு தீனி போடும் விதமாக படங்கள் அமைந்தது குறைவு தான். கடைசியாக விக்ரம் பிரபு நடிப்பில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெளியான படம் டாணாகாரன்.
இந்நிலையில் தரமான வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியாகி இருக்கிறது பாயும் ஒளி நீ எனக்கு. இப்படத்தை கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து தனஜெயன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை:
அதிகப்படியான வெளிச்சத்தில் மட்டும் தான் கண் தெரியும் என்றும் குறைந்த ஒளியில் குருட்டுத் தன்மை என்பதை மையமாக வைத்து இப்படம் எடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை நன்றாக உள்ளது.
திரைக்கதை
கதை சிறப்பாக இருந்தாலும் அதை விவரிக்கும் முறை மற்றும் காட்சி அமைப்பதில் இயக்குனர் சற்று தடுமாறி இருக்கிறார். படத்தில் முக்கிய பிளஸ் ஆக ஒளிப்பதிவு உள்ளது. பாயும் ஒளி நீ எனக்கு படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். வாணி போஜன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஈடு கொடுத்துள்ளார்.
படத்தில் நடிகர் தனஜெயனின் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கிறது. படத்திற்கு இசை உறுதுணையாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பு.
சில இடங்களில் தொய்வு இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்த காட்சி என்ன என்று ரசிகர்களை எதிர்பார்க்கும் படி உள்ளது. மேலும் நிறைய புது முயற்சிகளை படத்தில் இயக்குனர் கையாண்டுள்ளார் .
விக்ரம் பிரபுவுக்கு கண்டிப்பாக வெளிச்சத்தை பாயும் ஒளி நீ எனக்கு தரும்.