Friday, April 12, 2024

‘விக்ரம்’ படம் வெளியீட்டுக்கு முன்பேயே லாபத்தை ஈட்டிவிட்டதாம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் ரிலீஸுக்கு முன்பே 172 கோடி அளவுக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘விக்ரம்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் 35 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம்.

கேரள உரிமையை ஷிபு தமீம் 5.50 கோடிக்கும், தெலுங்கு உரிமையை நடிகர் நிதின் 5.50 கோடிக்கும், கர்நாடக உரிமையை கற்பக விநாயகா ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் 4.25 கோடிக்கும் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் அனைத்து மொழிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை 93 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே படத்தின் பாடல் உரிமம் 4.25 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை 25 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.

இதையெல்லாம் சேர்த்தால் 172 கோடி ரூபாய் அளவுக்கு ரிலீஸுக்கு முன்பே இந்த ‘விக்ரம்’ படம் வியாபாரம் ஆகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விக்ரம் படத்தின் மொத்தத் தயாரிப்பு செலவு கமல்ஹாசனின் சம்பளம் இல்லாமல் 75 கோடி என்கிறது சினிமா வட்டாரம். இதன் மூலமாக 100 கோடி அளவுக்கு இப்போதே விக்ரம் படம் லாபத்தை அள்ளிவிட்டதாகவே திரையுலகத்தினர் சொல்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News