யுவன் இசையில் விஜய் பாடிய ஒரே  பாடல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “லியோ”  படத்தின் படப்படிப்பு நடந்துவருகிறது. அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

யுவன் இசையமைக்கிறார்.

20 வருடங்களுக்கு முன்,  புதிய கீதை படத்திற்கு இப்போதுதான் விஜய் – யுவன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

விஜய் தன்னுடைய படங்களில் ஒரு பாடலை பாடுவது வழக்கம் தான். ஆனால், புதிய கீதை படத்தில் விஜய் பாடவில்லை.

ஆனால், விக்னேஷ் ஹீரோவாக நடித்திருந்த வேலை என்ற படத்தில், காலத்துக்கு ஏத்த ஒரு கானா என்ற பாடலை யுவன் இசை அமைக்க விஜய் பாடியிருந்தார். ஆகையால், தளபதி 68 படத்தில் விஜய் பாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.