Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

விஜய் அரசியலுக்கு வர ஐயாயிரம் கோடி தேவை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிப்பில் உருவான “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை   ஒட்டி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே அவரை சூப்பர் ஸ்டார் என சரத்குமார் சொல்ல அது சர்ச்சை ஆனது. தவிர, விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார் என்ற கருத்தும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தை, விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். சமீபத்தில் இரண்டு முறை தனது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார். சில அரசியல் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான மணி, யு டியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் 5000 கோடி செலவு செய்யும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்க முடியும். அந்த கெப்பாசிட்டி தி.மு.க. மற்றும் பாஜகவுக்குத்தான் இருக்கிறது.

விஜயிடம் பணம் இருக்குமா என தெரியவில்லை. இருந்தாலும், அவர்   செலவு செய்யமுடியாது. ஏனென்றால் வருமான வரித்துறையும் ஒன்றிய அரசும் விடமாட்டார்கள்” என்றார் மணி.

- Advertisement -

Read more

Local News