Wednesday, April 10, 2024

பொங்களுக்கு வெளியாகும் விஜய் சேதுபதியின் ’மெரி கிறிஸ்துமஸ்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமா தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, இந்தியில் ‘மும்பைக்கார்’ படத்தையடுத்து ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் நடித்திருந்தார்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்திப் படம் ‘அந்தாதுன்’. பாலிவுட்டில் வெற்றிப் பெற்ற இப்படம் தமிழில் ’அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக்காகிறது. இப்படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள இப்படத்துக்கு ப்ரீத்தம் இசையமைத்துள்ளார்.

தமிழில் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய, பூஜா லதா சூர்தி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. படம் வரும் டிசம்பர் 15 – ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News