Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

யு டியுப் விமர்சகர்களுக்கு விஜய் சேதுபதி சூடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15ஆம் தேதி துவங்கியது. சென்னை பிவிஆா் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், அண்ணா சினிமாஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன.

இந்நிலையில் இந்த திரைப்பட விழாவின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு திரைக்கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு அளிக்கப்பட்டது.

விருது பெற்ற  விஜய்சேதுபதி பேசியபோது, “திரைப்படங்களில்,  கதையின் மூலம் இயக்குநர்கள்  தெரிவிக்க விரும்பும் விஷயங்களை புரிந்துகொள்ளுங்கள்; சாதாரணமாக கடந்து போய்விடாதீர்கள்;  ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபடுங்கள்.

வாழ்க்கையின் அனுபவங்கள்தான் திரைப்படங்களாக உருவாகின்றன; வாழ்க்கையை புரிந்துகொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன.

எந்தப்படத்தையுமே விமர்சனங்களின் வாயிலாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டாம்.  இப்போதெல்லாம் யூடியூப்பில் கெட்டது பேசினால்தான் பணம் வருகிறது. விமர்சகர்கள் பார்வையில் திரைப்படங்கள் சரியாக பார்க்கப்படுகின்றதா எனத் தெரியவில்லை. நடிகர் பூ ராமு அவர்களுடன் இணைந்து இந்த விருதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்றார் விஜய்சேதுபதி.

விருதுக்கான பரிசுத்தொகையை விஜய் சேதுபதி, விழாக் கமிட்டிக்கு நன்கொடையாக திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News