Monday, August 19, 2024

விஜய் மன்ற நிர்வாகி ‘அந்த’ வழக்கில் கைது! ரசிகர்கள் அதிர்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபச்சார விடுதி நடத்தி வந்த தகவல் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்.   கருமண்டபம் ர் பகுதியில் சைன் என்ற பெயரில் ஸ்பா நடத்தி வருகிறார். இங்கு விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சோதனை நடந்தது.

அங்கு  லட்சுமி தேவி என்பவரும் மேலும் இரண்டு பெண்களும் இருந்தனர்.

விசாரணையில், உரிமை எதுவும் பெறாமல் பல ஆண்டுகளாக இதை நடத்தி வருவதும் அந்த  இரண்டு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும்  தெரியவந்தது. இதையடுத்து அந்த இரண்டு பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும் மேலாளர் லட்சுமி தேவியையும், உரிமையாளர் செந்திலையும் கைது செய்தனர்.

செந்தில் திருச்சியில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளராக இருக்கிறார்.  சமீபத்தில் சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்க விழாவிலும் கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த தகவல் சமூகவலைதளத்தில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

- Advertisement -

Read more

Local News