இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். எழில் இயக்கிய ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் கரு.பழனியப்பன்.
‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் பணியாற்றியபோது விஜய்யுடன் பழகிய அனுபவங்களைப் பற்றி சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.

அவர் பேசும்போது, “துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் விஜய் நடித்தபோதுதான் எனக்கு அவர் முதன்முதலாக அறிமுகமானார். ரிசர்வ்டு டைப். ரொம்பவும் நெருங்கிப் பழக மாட்டார். உதவி இயக்குநர்களுடன் பேசிப் பழகுவதற்கே அவருக்கு கொஞ்சம் நாட்களானது.
ஆனால், நான் பார்த்தவரையிலும் நிஜத்தில் வேறுவிதமாகவும், திரையில் வேறுவிதமாகவும் காட்சியளிக்கும் ஒரே நடிகர் விஜய் மட்டும்தான். கமல்ஹாசன் வெளியில் பேசும்போது சில இடங்களில் திரையில் அவர் காட்டிய மேனரிசங்கள் தெரிந்துவிடும். வேறு சில நடிகர்களுக்கும் இது தெரிந்திருக்கிறது.
ஆனால், எனக்குத் தெரிந்து இன்றுவரையிலும் திரைக்குப் பின்னால் வேறு மாதிரியாகவும், திரையில் வேறு மாதிரியாகவும் இருப்பது விஜய் மட்டுமே. அதை அவர் இப்போதுவரையிலும் அப்படியே பின்பற்றுவது ஆச்சரியமான விஷயம்..” என்று பாராட்டியிருக்கிறார்.