விஜய் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் .
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதுவும் ஹிட்.
இந்த நிலையில் இருவரும் காதலிப்பதாக தெலுங்கு மீடியாவில் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
இருவருமே இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். அந்த படங்களை தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றினர்.
இதையடுத்து, “இவர்கள் ரகசிய திருமணம் செய்துகொண்டனர்” என தெலுங்கு யு டியுப் சேனல்கள் சில, தெரிவித்தன.
இதையடுத்து ராஷ்மிகா, “விஜய் தேவர்கொண்டா எனது நண்பர். அவருடன் மாலத்தீவு சென்றேன். நண்பர்கள் சுற்றுலா செல்லக்கூடாதா?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.