நடிப்பு வேண்டாம்!: விஜய் சொன்னது ஏன்?

தமிழ்த் திரையுலகு என்பது நடிகர் விஜய் இன்றி முழுமையடையாது என்பது நிதர்சனம். அவரும் திரையுலகின் மீது தீரா காதல் கொண்டவர் என்பதும் தெரிந்த விசயம்தான்.

ஆனால் அவரே, “ஒரு கட்டத்தில் நடிப்பில் இருந்து விலகி விடுவேன்” என்று சொல்லி இருக்கிறார்.

இது குறித்து ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் கூறியிருக்கிறார்.   விஜய் நடித்த பிரியமுடன் மற்றும் நெஞ்சினிலே திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்.

இவர், “அந்த படப்பிடிப்பு சமயங்களில் விஜய் என்னுடன் நெருங்கி பழகி இருக்கிறார். நிறைய விசயங்களை பகிர்ந்துகொள்வார். அப்போது ஒருமுறை, ‘2000ம் வருடத்தில் இருந்து நடிப்பில் இருந்து விலகி விடப் போகிறேன். படங்களை இயக்குவதே எனக்கு விருப்பமாக இருக்கிறது’ என்று கூறினார். இதைக்கேட்ட எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது” என்று தெரிவித்து இருக்கிறார் விஜய் மில்டன்.