இயக்குனர் ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளர்.
இவர் இயக்கிய முதல் படம், நீ வருவாய் என. இப்படத்தின் சிறந்த திரைக்கதைக்காக அவர் தமிழக அரசின் விருதையும் பெற்றார்.
இப்படத்தில் பார்த்திபன் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். ஆனால் இந்த கேரக்டரில் நடிக்க முதலில் விஜயைத்தான் அணுகினாராம் ராஜகுமாரன்.
அவர் பல திரைப்படங்களில் பிசியாக இருந்த காரணத்தால் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே அந்த ரோலுக்கு அஜித்திடம் பேசி சம்மதம் வாங்கி இருந்தார் ராஜகுமாரன்.
அதனால் அஜித்திடம் “நீங்கள் மெயின் ரோல் பண்ணுங்கள். விஜய் கெஸ்ட் ரோல் பண்ணட்டும்” என்று கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு முடியவே முடியாது என்று அஜித் மறுத்து விட்டாராம். ஏனென்றால் அந்த மெயின் ரோலில் ஹீரோயின் ஹீரோவை கடைசிவரை வேண்டாம் என்று உதாசீனப்படுத்துவார்.
அதனால் சென்டிமென்ட்டாக யோசித்த அஜித் கெஸ்ட் ரோலில் தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறார். அதன் காரணமாகவே விஜய் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இந்த உண்மையை 23 வருடங்கள் கழித்து ராஜகுமாரன் வெளிப்படுத்தி இருப்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.