விஜய் ஆண்டனியின் ’வள்ளி மயில்’ டீசர் வெளியீடு

 

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் ’வள்ளிமயில்’.வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என கவனிக்க வைத்த பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். அந்த வரிசையில் வள்ளிமயில் இந்த படத்தில் பிரியா அப்துல்ல,சத்யராஜ்,பாரதிராஜா, தம்பி ராமையா,ஜி.பி.முத்து,ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சாய் சரவணன் தயாரிக்கிறார்.டி.இமான் இசையில் விஜய் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.