தமிழில் உச்ச நட்சத்திரங்களாக திகழும் விஜய்யின் வாரிசு – அஜித்தின் துணிவு ஆகிய படங்கள், பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதில் துணிவு படம் 11 ஆம் தேதியும் வாரிசு படம் 12 ஆம் தேதியும் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இரு தரப்பு ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் பட வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். யாருடைய படம் வசூலைக் குவிக்கும் என சமூகவலைதளத்தில் கடும் வாக்குவாதம் புரிந்து வருகிறார்கள்.
அதே நேரம் இருவரும் இணைந்து நடித்த ஒரு படமும் உண்டு. அது, ‘ராஜாவின் பார்வையிலே’.
இப்படம் வெளியாகி 28 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் சென்னையில் சில திரையரங்குகளில் இப்படத்தை மீண்டும் திரையிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது..!