இப்போதைக்கு கோடம்பாக்கத்தில் அனைவரின் கண்களும் பார்த்து, பார்த்துப் பொறாமைப்படும் ஜீவன் என்றால் அது விக்னேஷ் சிவன்தான்.
‘வருங்கால தம்பதிகள்’ என்ற ரீதியில் தினமும் சமூக வலைத்தளங்களில் இருவரும் போஸ்ட் செய்யும் புகைப்படங்களைப் பார்த்து காதில் புகை விடும் இளைஞர்கள்தான் தமிழகத்தில் அதிகம்.
நயன்தாராவைப் பொறுத்தமட்டில் அவர் அதிகமாக பேட்டியளிக்காமல் இருப்பதினால் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் தப்பித்து வருகிறார். அதேபோல் அவரால் படப்பிடிப்பிலும் பிரச்சினை என்று இதுவரையிலும் எந்தவொரு தயாரிப்பாளரோ, இயக்குநரோ சொன்னதே இல்லை.
அப்படியொரு அடக்கமாக நடந்து கொள்வார் நயன்தாரா. செட்டுக்குள் வந்துவிட்டால் இயக்குநர் என்ன சொல்கிறாரோ.. அதைச் செய்துவிட்டு.. இருக்கும் இடம் தெரியாமல் நடந்து கொள்வார் நயன்தாரா. அதை இயக்குநர்கள் சொல்லிச் சொல்லி பூரிக்கிறார்கள்.
ஆனால், அவர்களே இப்போது சலித்துக் கொள்வது நயனின் காதலரான விக்னேஷ் சிவனின் இடையூறுகளைத்தான்.
நயன்தாராவுக்காக கதை கேட்பது.. கால்ஷீட் பார்ப்பது போன்றவைகளை செய்தால்கூட பரவாயில்லை. தப்பில்லை. ஆனால் அதைவிட்டுவிட்டு அதற்கும் மேலாக படத்தின் டெக்னீஷியன்களை முடிவு செய்வதில் துவங்கி.. அவர்களிடத்திலேயே இயக்குநருக்கும் மேலாக படம் பற்றி ஆலோசனை சொல்வது.. பேசுவது என்பதாக விக்னேஷ் சிவனின் நடத்தை பல இயக்குநர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.
நயன்தாரா மேடத்தின் கவனத்திற்கு இதை யாராவது கொண்டு போனால் தேவலை..!!!